மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகுகளில் பயணித்தவர்களின் நிலைமை தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை எனவும், அவற்றில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான ஆணைக்குழு அச்சம் வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.