குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றநிலையால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
மேலும், ஈரானின் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பாலான விமானங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குவைத் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் தரையிறக்க நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான விமானங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு செய்தி நிறுவனமான குண தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன்,பயணிகள் தங்களது விமான நிலையை தொடர்ந்து சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என குவைத் ஏர்வேஸ் கோரியுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பிராந்திய நாடுகள் மீது பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் எடுக்கப்பட்டுள்ளது.
குவைத்திலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்திருப்பதால் குவைத் மீதும் அச்சுறுத்தல் நிலவி வரும் பின்னணியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.