மலேசியாவில் கன மழை பெய்தமையின் காரணமாக அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
இடைவிடாது பெய்த கனமழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெனிசுலா மலேசியா மாகாணத்தின் பஹங், சிலங்கர் ஆகிய 2 நகரங்கள் மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் இருந்த 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 26 ஆண்கள், 13 பெண்கள், 2 குழந்தைகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WorldNews
Leave a comment