Squirrel
உலகம்செய்திகள்

கருணைக் கொலை செய்யப்பட்ட அணில்: ஏன் தெரியுமா?

Share

பிரித்தானியாவில் அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடித்தமைக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா- பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்த நிலையில், உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என குறித்த அணில் அழைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அணிலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில்;

நான் அந்த அணிலுக்குக் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு கொடுத்து வந்தேன். என்னோடு நட்புடன் தான் இருந்ததது. ஆனால், கடந்த வாரம் நான் உணவளிக்கும்போது அது என் விரலைக் கடித்தது.

மேலும் பலரை இம்மாதிரியே அந்த அணில் கடித்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் கால்நடை மருத்துவர்களால் அந்த அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்தி வெளியானதிற்குப்பின்னர் அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதை விலங்குகள் நல ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...