8 25 scaled
உலகம்

அமெரிக்காவில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம் : கமலா ஹாரிஸை கேலி செய்த ட்ரம்ப்

Share

அமெரிக்காவில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம் : கமலா ஹாரிஸை கேலி செய்த ட்ரம்ப்

கமலா ஹாரிசை(Kamala Harris) விட தான் அழகாக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்திலும் ட்ரம்ப் மீண்டும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) குறித்து பேசியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய ட்ரம்ப், “ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது மிகவும் எளிதானது என நம்புகிறேன். பல முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரியைப் போல் நடந்துகொள்கிறார்.

அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவர் அழகானவர்; ஆனால் நான் அவரை விட அழகாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உட்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
862
உலகம்செய்திகள்

4 கி.மீ நீந்தித் தாயையும் உடன்பிறப்புகளையும் மீட்ட 13 வயதுச் சிறுவன்: மேற்கு அவுஸ்திரேலியாவில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடாவில் (Geographe Bay), சீற்றமான கடல் அலைகளுக்கு மத்தியில் சுமார் 4...

26 698084fbda31a
உலகம்

நில ஒதுக்கீடு முறைகேடு: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு 10 ஆண்டுகள் சிறை!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு, அரசாங்க நில ஒதுக்கீட்டில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலில்...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

f255d14dbc86150d596e80f2fed4b9cb
செய்திகள்உலகம்

பாம்புக்கடி: ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு உயிர் பறிபோகிறது – அதிர்ச்சியூட்டும் அறிக்கை!

உலகப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தை (Neglected Tropical Diseases Day) முன்னிட்டு, Strike Out...