உலகம்
ஆதி குணசேகரனாக மாஸ் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி, அதிரடி Promo வீடியோ
ஆதி குணசேகரனாக மாஸ் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி, அதிரடி Promo வீடியோ
மாரிமுத்துவின் மறைவுக்கு பின் அவர் ஏற்று நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் இருந்தது.
எதிர்நீச்சல் சீரியலின் மாபெரும் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக இருந்ததே மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் தான். அவருடைய மறைவு பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இனி ஆதி குணசேகரனாக யார் நடிப்பார், அப்படியே நடித்தாலும் மக்கள் மனதில் மாரிமுத்துவை போல் இடம்பிடிக்க முடியுமா என பல கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி தான் நடிக்கிறார் என உறுதி செய்யப்பட்டது.
ஆனால், இதுவரை அவருடைய முகத்தை காட்டவில்லை. இப்படியொரு நிலையில், செம மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள வேல ராமமூர்த்தி.
ஆம், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் எபிசோடில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுக்கிறார். அதன் ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.