Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

Share

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தை ஹெச். வினோத் இயக்க, கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது.

தற்போது, அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் முன்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” நான் படிப்பில் பெரிய அளவிற்கு சிறந்து விளங்கவில்லை. அதனால், திரைப்படங்களில் என்னை அறிமுகப்படுத்துமாறு என் தந்தையிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டார், இதனால் வீட்டை விட்டு போவது போன்று பில்ட்-அப் கொடுத்து விட்டு உதயம் தியேட்டரில் படம் பார்க்க சென்று விட்டேன்.

இரண்டு மணி நேரத்தில் திரும்பி வரும் திட்டம் இருந்தது. ஆனால், படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் உதயம் தியேட்டரில் இருப்பதை என் தந்தை கண்டுபிடித்து அங்கு வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...