7 2 scaled
உலகம்செய்திகள்

ஹிஜாப் விதிகளால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இன்னொரு இளம் பெண்

Share

ஹிஜாப் விதிகளால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இன்னொரு இளம் பெண்

ஈரானில் ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை என கூறி இளம் பெண் ஒருவரை பெண் பொலிசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெஹ்ரான் சுரங்க ரயில் நிலையத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 16 வயதேயான Armita Garawand என்பவர் கோமா நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.

குறித்த இளம்பெண் சிறப்பு பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்றே சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என விளக்கமளித்துள்ள ஈரான் நிர்வாகம்,

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அந்த இளம்பெண் மயங்கி விழுந்தார் எனவும், சிறப்பு பாதுகாப்பு படையினரின் தலையீடு எதுவும் இந்த விவகாரத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, ஓராண்டுக்கு முன்னர் இதேப்போன்று ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை என குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட Mahsa Amini என்ற இளம்பெண் பொலிஸ் காவலில் மரணமடைய, அந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன்,

போராட்டம் ஆர்ப்பாட்டம் என ஈரான் மொத்தம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் தற்போது சிறையில் உள்ளனர்.

அது போன்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்படாதவாறு தற்போது Armita Garawand விவகாரத்தை முடித்துவைக்க ஈரான் முயற்சி முன்னெடுத்துள்ளது. ஆனால் சமூக ஆர்வலர்கள் குழுவினர், இந்த விவகாரத்தின் உண்மை நிலை மக்களை சென்று சேர வேண்டும் என கூறுகின்றனர்.

அறநெறிப் பொலிஸ் என்று அழைக்கப்படுபவர்களால் கைது செய்யப்பட்டு உடல்ரீதியாக தாக்கப்பட்ட பின்னர் கரவண்ட் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.

மேலும், கடுமையான பொலிஸ் காவலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் உட்பட எவரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் கரவண்ட் இதுவரை சுயநினைவுக்கு திரும்பவில்லை என்றே சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...