இந்தியா
மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை நிரப்புவாரா இந்த பிரபலம்?
மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை நிரப்புவாரா இந்த பிரபலம்?
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து எதிர்பாராத விதமாக நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மாரிமுத்துவின் மறைவு அதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னையில் வைக்கப்பட்டு பின் நல்லடக்கத்திற்காக சொந்த ஊரான தேனி அருகே உள்ள பசுமலைதேரி கிராமத்திற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
பசுமலைதேரி கிராமதில் ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் இறுதி அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
சினிமாவில் 30 ஆண்டுகள் வரை கடுமையான உழைத்த மாரி முத்து தற்போது சன்டிவியில் வெளியான எதிர் நீச்சல் நாடகத்தின் வழியாக ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.
இந்நிலையில் மாரி முத்து மறைந்த நிலையில் எதிர் நீச்சல் சீரியலில் மாரி முத்து நடித்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.