சினிமா
வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்
வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்
பிரமாண்டமாக உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலரை பார்க்க தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது. நாளை வெளியாகவிருக்கும் லியோ படத்தின் டிரைலர் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் எண்ணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கும்.
இந்நிலையில் லியோ படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ள இயக்குனர் தீரஜ் வைத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் லியோ டிரைலர் குறித்து பதிவு செய்துள்ளார்.
இதில் ‘Just met Lokesh and saw the trailer! Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்’ என கூறியுள்ளார். இதனால் லியோ டிரைலர் மீது இருந்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
தீரஜ் வைத்தி ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். இவர் லியோ படத்தில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.