rtjy 310 scaled
இந்தியாசெய்திகள்

மீன் முள்குத்தி பெண் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்

Share

மீன் முள்குத்தி பெண் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மீன் முள் குத்தி பெண் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி.

இவரது மனைவி கனகவல்லி, 57 வயதான இவர் அப்பகுதியில் உள்ள அடப்பாற்றில்  மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று கனகவல்லி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் ஆற்றில் இறங்கி இறால் மற்றும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.

இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இறந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Share
தொடர்புடையது
முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

Jaishankar
இந்தியா

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.

இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...