hersana
செய்திகள்இலங்கை

மாகாணசபை முறைமையை எதிர்த்தவர்கள் எங்கே?

Share

மாகாணசபை தேர்தல் நடத்தப்படாது, மாகாணசபை முறைமை ஒழிக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் சூளுரைத்தனர். ஆனால், இந்தியாவின் அழுத்தத்தால் அரசு தேர்தலை நடத்த தயாராகின்றது.

இது தொடர்பில் அமைச்சர்கள் மூவரினதும் நிலைப்பாடு என்ன – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபை முறைமை எமது நாட்டுக்கு பொருத்தமற்றது, அந்த முறைமையை ஒழிக்க வேண்டும், புதிய அரசியலமைப்பு ஊடாக இது நடக்கும் என அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இந்தியாவின் இராஜாதந்திரிகள் வந்துசென்ற நிலையில், அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகின்றது. ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர்கள் மௌனம் காக்கின்றனர். இது தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு என்ன?

தேர்தல் நடைபெறுவதை நாம் எதிர்க்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலைகூட எதிர்கொள்வதற்கு தயார். ஆனால் பிற நாடுகளின் அழுத்தத்தால் தேர்தல் நடைபெறுவதையும், உள்ளக விடயங்கள் மாற்றப்படுவதையும் நாம் விரும்பவில்லை. சர்வதேச அழுத்தங்களுக்கு இந்த அரசுதான் வழிவகுத்துள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...