4 6
இந்தியாசெய்திகள்

இதுதான் வேணாம்னு சொன்னேன்.. வாட்டர் மெலன் சுதாகருக்கு விஜய் சேதுபதி கொடுத்த நோஸ் கட்

Share

பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. துவக்க நிகழ்ச்சியில் முதலில் விஜய் சேதுபதி மொத்த வீட்டையும் சுற்றி காட்டினார்.

அதன் பிறகு போட்டியாளர்களை அறிமுகப்படுத்த தொடங்கினார். முதல் ஆளாக வாட்டர் மெலன் சுதாகர் தான் போட்டியாளராக வந்தார்.

தான் டாக்டர் என்றும் இங்கு டைட்டில் ஜெயித்தால் அந்த பணத்தை சொந்தமாக பெரிய பிஸியோதெரபி மருத்துவமனை கட்டி குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கப்போவதாக அவர் கூறினார்.

திவாகரை உள்ளே அனுப்பும் முன் உங்களுக்கு யாருக்காவது கைகாட்ட வேண்டும் என்றால் காட்டிக்கொள்ளுங்கள் என கூறினார். அப்போது திவாகர் தான் எல்லோருக்கும் காட்டுவதாக சொல்லி கையை தூக்கி காட்டினார். அதை பார்த்து மொத்த ஆடியன்ஸ் கூட்டமும் சைலண்டாக இருந்தது.

‘கைத்தட்டுங்க பாவம்’ என சொல்லி விஜய் சேதுபதி எல்லோரிடமும் சொன்னார். “ஒரு மனுஷன் எவ்ளோ உற்சாகமா வந்திருக்காரு. இவ்ளோ சைலண்டா இருக்கீங்க” என சொல்லி அவரை கலாய்த்தார் விஜய் சேதுபதி.

“நீங்க தெரிந்த விஷயத்தையே மீண்டும் மீண்டும் டிஸ்கஸ் பண்ணும்போது சுவாரசியம் இல்லை. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்க” என விஜய் சேதுபதி அட்வைஸ் கொடுத்தார்.

“நான் உங்க முன்னாடி நடிச்சு காட்டணும்” என சொல்லி திவாகர் அப்போது சொல்ல, “அது தான் வேண்டாம் நமக்கு. உங்களுக்கு பழக்கப்பட்ட மேடையாக இதை மாத்திறாதீங்க” என சொல்லி நோஸ்கட் கொடுத்தார்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....