5 6
இந்தியாசெய்திகள்

1 like – 1 Slipper.. இது ரொம்ப ரொம்ப ஓவராச்சே..! மீண்டும் விஜயை அசிங்கப்படுத்திய ஓவியா

Share

கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது 41 பேர் கூட்ட நெரிசல் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்போது வரையில் மிகப்பெரிய  அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது.

இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள்,  கர்ப்பிணிகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. இந்த  சம்பவம் நடைபெற்ற சில நேரங்களிலேயே நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என போஸ்ட் போட்டார்.

இதைத்தொடர்ந்து விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள்  ஓவியாவின் பதிவுக்கு  எதிராக தமது கருத்துக்களை முன்வைத்தனர். அது மட்டும் இல்லாமல் ஓவியாவை ஆபாசமாகவும் திட்டினர். அதனையும்  ஓவியா  ஸ்க்ரீன் ஷாட் எடுத்து  இன்ஸ்டா  ஸ்டோரில் பதிவிட்டார்.

இவ்வாறு தொடர்ச்சியாக விஜய்க்கு எதிராக  தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார் ஓவியா.  மேலும் கரூர் சம்பவம் தொடர்பில்  இதுவரை விஜயை கேள்வி கேட்கவில்லை,  அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்யவில்லை என பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை ஓவியா. அதில்  கரூர் சம்பவம் நடைபெற்று எட்டு நாட்கள் ஆகின்றன.  விஜயின் அலட்சியத்தால் 41 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சென்று இன்னும் சந்திக்கவில்லை.  எனவே எல்லோரும் ஒரு காரியத்தைச் செய்வோம் என இறுதியில் ஒரு லைக் ஒரு ஸ்லிப்பர் ஷாட்  என பதிவிட்டுள்ளார்.

அதாவது இவர் மறைமுகமாக ஒரு லைக் என்றால்  ஒரு செருப்பு.   ஆகமொத்தத்தில் அவரை செருப்பால் அடிக்கும் விதத்தில் இந்த பதிவை ஓவியா பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...