தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த உத்தரவை மத்திய மண்டல காவல் துறையின் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் பிறப்பித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர பொலிஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை பொலிஸார் கடந்த 29-ம் திகதி கைது செய்தனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய மத்திய மண்டல காவல் துறை தனிப்படை அமைத்துள்ளது.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு த.வெ.க நிர்வாகியை தமிழ்நாட்டு காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக இந்திய சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் த.வெ.க வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்றது.
இதில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் உட்பட 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர், த.வெ.க கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அதனடிப்படையில் நேற்று த.வெ.க கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதான நிலையில், மேலும் ஒரு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
வரும் நாட்களில் பொதுமக்களை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை விஜய் எதிர்கொள்ள நேரிடும்” என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.