12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

Share

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜனித் மதுசங்க டி சில்வா என்ற ‘பொடி லெசி’யை (Bodi Lassie) 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், பிற்பகல் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் (Baddegama Magistrate Court) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி வழங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு முதல் பொடி லெசி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன

அவற்றில் 5 கொலை வழக்குகள் 13 கொலை முயற்சி மற்றும் கடுமையான உடல் ரீதியான தீங்கு மற்றும் 8 குற்றங்களைத் திட்டமிட்டு உதவி செய்தமை உள்ளிட்டவை அடங்கும்.

பலப்பிட்டிய நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்த ‘பொடி லெசி’, 2025 ஜனவரி 16 அன்று இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். பொலிஸ் மா அதிபரின் விசேட கோரிக்கையின் பேரில், இந்திய அதிகாரிகளால் அவர் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...