14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

Share

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் மட்டுமின்றி, வீட்டுக் காவல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தவர்களும் இந்தச் சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய வெனிசுலா பாராளுமன்ற சிறப்புக் குழுத் தலைவர் ஜோர்ஜ் அர்ரியாசா (Jorge Arreaza), பொது மன்னிப்புக் கோரி இதுவரை 4,203 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

சட்டம் நடைமுறைக்கு வந்த நான்கு நாட்களில் 3,052 பேருக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த 179 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்கப் படைகளால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் (Delcy Rodríguez) தலைமையிலான புதிய அரசு, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கப் போவதாக அறிவித்தது. அதன் அடிப்படையில் இந்த விடுதலைகள் இடம்பெறுகின்றன.

நிபந்தனைகள்:
கொலை, போதைப்பொருள் கடத்தல், இராணுவக் கிளர்ச்சி மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பொது மன்னிப்புச் சட்டத்தில் இடமில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...