Train
செய்திகள்இலங்கை

மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த ரயில் சேவைகள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக இடம்பெறவுள்ளன என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரயில் சேவைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வழமையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

130 அலுவலக ரயில்கள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பயணிகள் நெருக்கடியின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில், புதிதாக பல கடுகதி ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...