நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது .
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.
தலவாக்கலை பகுதிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி குறித்த முச்சக்கரவண்டி சென்றுள்ளது
இந்த விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வர் ,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் என அறுவர் காயமடைந்துள்ளனர் .
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு இவ் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பகாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment