ஆனந்த பாலித
செய்திகள்அரசியல்இலங்கை

“விலை அதிகரிக்கும் வரை எரிபொருளை பதுக்கிவைத்திருந்தது அரசு”

Share

இலங்கையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

20 ஆயிரம் மெற்றிக் டன் பெற்றோல், 7 ஆயிரம் மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6 ஆயிரம் மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கூட்டுத்தாபனம் மறைத்து வைத்து விலையை அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடவில்லை.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட 55 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்தது.

கூட்டுத்தாபனத்தில் உள்ள கிடங்குகளில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பெற்றோல், 7 ஆயிரம் மெட்ரிக் டன் சுப்பர் டீசல் மற்றும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் சுப்பர் பெற்றோல் இருந்ததும் விநியோகிக்கப்படவில்லை.

எரிபொருளுக்கு உண்மையாகவே தட்டுப்பாடு ஏற்படவில்லை. நாட்டுக்கு வந்த எரிபொருளுக்குப் பணம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும், அரசு விலை அதிகரிக்கும் வரை பெற்றோலை விநியோகிக்கவில்லை” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...