172037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரை ஒதுங்கிய படகு- மாயமான மீனவர்!!

Share

மட்டக்களப்பு முகத்துவாரம்  பகுதியில் செட்டிபாளையம் கடல் கரையில் படகொன்று  கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் விசாரணையின்போது நேற்று(23) இரவு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் படகே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது தெரியவருகிறது. குறித்த படகு கவிழ்ந்ததிலேயே இந்நபர் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளார்.

மட்டக்களப்பு திரைமடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த மீனவர் நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ந்ததை அடுத்து அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார் எனத் தெரியவருகிறது..

காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...

death body
இலங்கை

வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல யாரும் முன்வராத பரிதாபம் – விபத்தில் உயிரிழந்த முதியவர்.

நேற்றைய தினம் இரவு காரைநகரில் இடம்பெற்ற விபத்தில், காரைநகர் – கருங்காலி பகுதியை சேர்ந்த 66...

ஹர்ஷன நாணயக்கார
இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியாக, மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெற்றிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளதாக...