Pakistan
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர் கொடூரமாகக் கொலை: நாடாளுமன்றில் ஆர்ப்பரித்த குரல்கள்!!-

Share

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன,

“பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலையில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர், அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, நீதியை வழங்குவதற்கு பாகிஸ்தான் பிரதமர் தலையிட்டுள்ளார். இதனை நாம் மதிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இக்கொடூர சம்பவத்தை வன்மையாக தமது கட்சி கண்டிக்கிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதையும் பாகிஸ்தானில் உள்ள இலங்கைத் தூதுரகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...

26 697304b4809de
செய்திகள்உலகம்

உலக வரலாற்றில் முதல் முறை: 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து தங்கம் விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 5,500 அமெரிக்க...

Vihaan Malhotra 1 400x240 1
செய்திகள்விளையாட்டு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை இளையோர் அணி அபார வெற்றி: விரான் சமுதித்த மற்றும் ஆகாஷ் அதிரடி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று (29) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில்,...

upfront lede 052957753 16x9 0
செய்திகள்இலங்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா: பெப்ரவரி 27, 28 இல் கோலாகலம் – 25,000 பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27...