upfront lede 052957753
செய்திகள்இலங்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா: பெப்ரவரி 27, 28 இல் கோலாகலம் – 25,000 பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு!

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்படை அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து சுமார் 25,000 பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள், குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, கடற்படையினரின் ஒத்துழைப்புடன் படகுப் போக்குவரத்துகளை முறைப்படுத்துவது குறித்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடையாளமாகத் திகழும் இந்தப் பெருவிழாவிற்குத் தேவையான சகல அடிப்படை வசதிகளையும் மாவட்ட செயலகத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவானது இரு நாட்டு மீனவர்கள் மற்றும் கத்தோலிக்கப் பக்தர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய கலாசார நிகழ்வாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...