ஆசிய கிண்ணத் தொடரில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி தரவரிசையில் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நிசங்க ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக 52 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கிண்ணத் தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் விக்கெட் காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ரிஸ்வான், சக வீரர் பாபர் அசாமை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ரிஸ்வான் ஆசிய கிண்ணத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் 192 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர் வரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். எனினும் ஆசிய கிண்ணத்தில் சோபிக்கத் தவறிவரும் வனிந்து ஹசரங்க 3 இடங்கள் பின்தங்கி 9ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
Leave a comment