PrathibaM2018
அரசியல்இலங்கைசெய்திகள்

படையினரை யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முயற்சி!

Share

” கலப்பு (ஐபிரிட்) நீதிமன்றம் ஊடாக, 58 படையினரை சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முயற்சித்து வருகின்றார்.”

இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார் .

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஊடாக 58 இலங்கை படையினரை சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட், 2015 ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகின்றார். அதனால்தான் ஓரிரு இராணுவ அதிகாரிகள் இருந்தாலும், இராணுவ மயமாக்கல் என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

பிற நாடுகளில் இராணுவ நியமனம் இல்லையா, எதற்காக இலங்கையின் பின்னால் மட்டும் துரத்த வேண்டும்? இராணுவ மயமாக்கலால்தான் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற விம்பத்தை உருவாக்கவே இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மே 9 சம்பவம், இறுதியாக இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்படும். இராணுவத்தினரின் பெயர்களை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தப்படுகின்றது. இந்த சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் படை குறைப்பு பற்றியும் பேசப்படுகின்றது. ஆனால் அங்கு வாழும் மக்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினாலும், வெளியில் புறம் பேசுகின்றன. எனவே ,உறுதியானதொரு வெளிவிவகாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...