அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரி செனட்டர் பௌலின் ஹான்சன் (Pauline Hanson) பர்தா (Burqa) அணிந்து சபைக்குள் நுழைந்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செனட்டர் பௌலின் ஹான்சன் சபைக்குள் நுழைந்த போது முக மறைப்பை அகற்ற மறுத்துவிட்டமையால் அவை நடவடிக்கைளில் குழப்பம் ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்றைய அமர்வில் இருந்து அவர் நாள் முழுவதும் விலக்கிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்தச் செயலை அனைத்துக் கட்சிகளின் செனட்டர்களும் பரவலாகக் கண்டித்துள்ளனர். செனட்டர் பௌலின் ஹான்சனின் செயல் அவமரியாதைக்குரியது எனப் பிற செனட்டர்கள் விமர்சித்துள்ளனர்.
தனது செயல் குறித்துப் பேசிய பௌலின் ஹான்சன், தேசியப் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பெண்கள் தவறாக நடத்தப்படுவதை முன்னிலைப்படுத்தவே தான் பர்தா அணிந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் பல்வேறு தரப்பிலிருந்து பரவலான விமர்சனங்களைக் கொண்டுவந்துள்ளது.