இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மஹேல ஜெயவர்த்தன நிராகரித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு பதிலாக, இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்த்தனவை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்வந்துள்ளது,
இந்த நிலையில் இந்த அழைப்பை மஹேல ஜெயவர்த்தன அவர் அதனை நிராகரித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் இலங்கை தேசிய அணி ஆகியவற்றின் பயிற்றுவிப்பாளராக தான் கடமையாற்ற விரும்புவதால் இந்த பதவியை ஏற்க முடியாதென மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி ரி-20 உலகக் கோப்பைக்கு பின்னர் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளேன் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment