23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

Share

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளது, மனித உரிமைகள் அமைப்பு ஒன்று.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau, வெளிநாட்டவர்கள் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பான Defenseur des Droits என்னும் அமைப்பு, பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது ஏற்கனவே கடினமான விடயம், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று சாடியுள்ளது.

Defenseur des Droits அமைப்பின் தலைவரான Claire Hédon, ஒருவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அவர் அதற்கான பதிலைப் பெறுவதற்குள்ளேயே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அது ஏற்கனவே கடினமான விடயம் என்று கூறியுள்ளார்.

அதற்கு மாறாக, ஏற்கனவே முறைப்படி பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியிருப்பு அனுமதி அட்டைகளை புதுப்பிப்பதில் பிரச்சினைகள் உள்ளன.

ஆகவே, அந்த பிரச்சினையை முதலில் தீர்ப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார் Claire Hédon.

Share
தொடர்புடையது
iran us
உலகம்

அமெரிக்காவின் 80 இற்கும் அதிகமான இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் – எண்ணெய் ஏற்றுமதி உரிமத்தினை ரத்து செய்த அமெரிக்கா!

அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக்...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...