சாரதி அனுமதிப்பத்திரங்களின்
செய்திகள்இலங்கை

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

Share

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்துக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்குப் பாதுகாப்பான முறைகள் கொண்ட கணினி மென்பொருள் ஒன்றை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தோடு, தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் புதிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை உரிமையாளருக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலைமை சீரானதன் பின்னர் உரிய அட்டை அச்சிடப்பட்டு விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுப்பிவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...