நாட்டில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று இந்த பிரசவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. குழந்தைகள் நலமுடன் உள்ளன என மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் (வயது-31) ஒருவரே, இவ்வாறு ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
#SriLankanews
Leave a comment