unnamed 3
செய்திகள்அரசியல்இலங்கை

சாணக்கியன் உட்பட ஏழுபேருக்கு மாவீரர் நினைவேந்தலுக்கு தடை!

Share

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்கு நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், த.சுரேஷ் முன்னாள் போராளிகளான நடராசா சுரேஸ், தம்பித்துரை கஜேந்திரன்,
பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் சீ.புஷ்பலிங்கம் ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...