21 612d0ebe7672b
செய்திகள்இலங்கை

ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு !

Share

ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு !

16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியூதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கியுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...