image 70e24042f0
செய்திகள்அரசியல்இலங்கை

ஞானசாரதேரரை பதவியிலிருந்து நீக்குங்கள்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.

Share

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவரை  அப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்துள்ளார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16) விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  போராட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் இப்படி பயப்படுகிறது எனவும் சபையில் வினாக்களை எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் காரணங்காட்டி அரசாங்கம் போராட்டங்களை அரசாங்கம் தடுத்து வருகிறது.

நாட்டின் பெரும்பான்மை நீதிமன்றங்கள் தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்துள்ள நிலையில், அதனை மதிக்காது போராட்டங்களுக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர் என்றும்
தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக  நாட்டில் இனவாதத்தையும், வெறுப்பையும் பரப்பும் பௌத்த பிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...