LPL 2020 scaled
செய்திகள்விளையாட்டு

LPL- வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்!

Share

LPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடர், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.

இதையொட்டி இப் பதிவுகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையவுள்ளன.

இத் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தம் நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  ஒவ்வொருவரும் தமது நாட்டின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

அத்துடன், முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவராக இருக்கவேண்டும்.  T-20 தொடருக்கான அணியில் இடம்பெற்றவராக இருக்க வேண்டும் என்பது கட்டாய தகுதியாகும்.

இந்த தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 20 வீரர்கள் விளையாட உள்ளளர்.

LPL அணியில் பங்கு பெறும் 20 வீரர்களில் 14 பேர் உள்ளூர் வீரர்களாகவும் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருப்பார்களென்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...