Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த கடினமானதும், தீர்மானமிக்கதுமான தீர்வுகள் குறித்து அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த தீர்மானங்களே நாட்டின் தற்போதைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக மகிந்த சிறிவர்தன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலைமை மிகவும் கடுமையான நெருக்கடியில் இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல், நாட்டுக்காக தேவையான கடினமான முடிவுகளை எடுக்க தயங்காமல் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றால் இன்றைய வெற்றிகளெல்லாம் வீணாகி இருப்பதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது பலமுறை ரணிலை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அத்துடன், அவருடன் பணிபுரிந்த காலத்தில் பல விடயங்களை தாம் கற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை நிதி அமைச்சின் செயலாளராக நியமித்ததற்காக நன்றி தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் ஆரம்பித்த பொருளாதார மேலாண்மை திட்டத்தில் பல தீர்மானங்கள் தம்மாலேயே எடுக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும், அந்த அனுபவங்களில் பலவற்றை தாம் கற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது அந்த திட்டத்தை தொடர்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்துள்ள முடிவை “மிகச் சிறந்த தீர்மானம்” என அவர் பாராட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...