mahintha.....
செய்திகள்அரசியல்இலங்கை

நாளையே வெளியேறத் தயார்! – மஹிந்த அமரவீர

Share

“அரசிலிருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு, நாளையே வெளியேறுவதற்குத் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

” உரப் பிரச்சினை மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் ஆகியவை தொடர்பில் நாம் விமர்சனங்களை முன்வைத்தோம். இது சிலருக்கு வலித்திருக்கலாம். இதனால் அரசியிலிருந்து வெளியேறி விமர்சனங்களை முன்வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

எமது கட்சி தீர்மானித்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்கு நாம் தயார். எனினும், அத்தகையதொரு முடிவை கட்சி இன்னும் எடுக்கவில்லை. நாடு தொடர்பில் நாம் அதிகம் சிந்திப்பதாலேயே பொறுமைகாத்து வருகின்றோம்.

அரசிலிருந்து வெளியேறிய பிறகு நாம் எங்கு செல்வது? சஜித்துக்கு பின்னால்சென்று, கைப்பாவையான அவரை ஜனாதிபதியாக்குவதா என்ற பிரச்சினை எமக்கு உள்ளது. அதேபோல தோல்வியடைந்த தலைவரான ரணிலை மீண்டும் பலப்படுத்துவதா என்ற பிரச்சினையும் உள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...