சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

Share

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும், உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள், சீரமைக்கப்பட்டு மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

அவற்றுள், கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.

இருப்பினும், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி (டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...