Economic
செய்திகள்அரசியல்இலங்கை

பொருளாதார உடனடி தீர்வு வழங்குக! – அரசிடம் கோரிக்கை

Share

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக நிரந்தர தீர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும் சில எம்.பிக்களும் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கூட்டறிக்கையின் பிரகாரம் , தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாடு எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

01. 2020 ஏப்ரலில் இருந்து சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்தமையே இதன் மையக்கருமாகும்.

02. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மாதாந்தம் தேவையான இறக்குமதிக்குக் கூட போதுமானதாக இல்லாத காரணத்தினால், சுதந்திரத்திற்குப் பின்னர் மிகக் குறைந்த அந்நியச் செலாவணியை நாடு கொண்டுள்ளது.

03. 2020 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட அரசாங்க வருவாயில் 70% கடன் வட்டி செலவினம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த கடன் வட்டி விகிதமாகும்.

04. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த பொதுக் கடனை 95 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை உயர்த்திய நான்கு காரணிகள் இவை.

மேற்கூறியவை மிகப்பெரிய பொருளாதார சவாலை பிரதிபலிக்கிறது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...