1599582341 president 2
செய்திகள்இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி கன்னி உரை!

Share

எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதுவே ஜனாதிபதியின் முதல் உரை என்று ம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது கல்வி, விவசாயம் மற்றும் பொருளாதார துறைகள் குறித்து துறைசார் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இவ் விஜத்தின்போது பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக ஜனாதிபதி குறைந்த எண்ணிக்கையான பிரதிநிதிகளுடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது .

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...