Udaya.jpg
செய்திகள்இலங்கை

வெறும் 10 நாட்களுக்கே பெற்றோல்! – வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில

Share

நாட்டில் 10 நாட்களுக்கு மட்டுமே பெற்றோல் கையிருப்பில் உள்ளது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை உண்மையே. இதற்கு தற்போதைய அரசு மட்டும் பொறுப்பல்ல. நாட்டை ஆட்சி சித்த அனைவருமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

தற்போது நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருளை இறக்குமதி செய்வதில் மிகப்பெரும் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ‘பெட்ரோல் – 92’ பத்து நாட்களுக்கும், ‘பெட்ரோல் 95’ நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கையிருப்பில் உள்ளன. மேலும் 6 நாட்களுக்கு தேவையான டீசல் தற்போது இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு ஆயிரத்து 285.50 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....