8156fbd7 28a9a3b4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி!!

Share

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வேனின் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

கொக்ட்டிசோலையில் இருந்து வவுணதீவு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், வவுணதீவு தாண்டியடியில் இருந்து கொக்கட்டிச்சோலை நோக்கி சென்ற வேனும் வாழைக்காடு சந்தியில் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தவர் உயிரிழந்துள்ளார்.

58 வயதுடைய கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த  மைலப்போடி சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...