Land diss
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணி சுவீகரிப்பு முயற்சி: பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்!

Share

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதற்காக, அரசியல் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் இன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி அன்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் யசோதா உதயகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தனக்கு மேல் இடத்தில் இருந்துவரும் உத்தரவுகளையே தான் நடைமுறைப்படுத்துவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...