IMG 20211101 WA0019
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நியமனத்தில் புறக்கணிப்பு: போராட்டத்தில் சுகாதாரத் தொண்டர்கள்!!

Share

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில் 970 சுகாதாரத் தொண்டர்கள் நீண்டநாட்களாகப் பணியாற்றியிருந்த நிலையில், அதில் 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதில் ஏனையோரிற்கு நியமனம் வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம் எனவும், மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம்.

ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு, தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போதைய, புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...