800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!
இந்தியாசெய்திகள்

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!

Share

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!

ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு, இவரது கணவர் முசு, தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது.

வறுமையின் காரணமாக தாய் கராமி முர்மு, குழந்தையை இனி நாம் வளர்க்க முடியாது என நினைத்து குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதனையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பி வந்த முசு 2 ஆவதாக பிறந்த பெண் குழந்தையை பற்றி கேட்டுள்ளார். அதற்கு, குழந்தை இறந்துவிட்டதாக முர்மு கூறியுள்ளார்.

ஆனால், சந்தேகமடைந்த முசு போலீசில் புகார் அளித்துள்ளார். 800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்றது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், தாய் முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி, ஏற்பாடு செய்த நபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....