arr
செய்திகள்இலங்கை

சிறுவன் துஷ்பிரயோகம் – பிக்கு கைது!!

Share

சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை நேற்று (25) ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயது சிறுவனே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்காக விகாரையில் தங்கியிருந்து படித்து வந்துள்ள நிலையில் நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று (25) சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளான். இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் கைதுசெய்ததுடன் சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
l74820260203063620
உலகம்செய்திகள்

இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் போர் முடிவு: 25% மேலதிக வரி நீக்கம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ததற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்திருந்த 25% தண்டனை வரியை...

Washing reselling surplus food 750x375 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் அதிரடி: சுகாதாரச் சீர்கேடு காரணமாக முன்னணி உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடல்!

வவுனியா நகரில் மிகவும் அசுத்தமான முறையில் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கி வந்த பல...

images 11
செய்திகள்இந்தியா

20 இலட்சம் புத்தகங்களின் சேகரிப்பாளர்: பத்மஸ்ரீ அன்கே கவுடாவின் அரிய சாதனை!

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா (Anke...

26 698472524cf78
செய்திகள்உலகம்

பிரான்ஸில் சீன உளவாளிகள் கைது: Airbnb வீட்டின் தோட்டத்தில் செயற்கைக்கோள் கருவி மூலம் ரகசியத் தகவல் சேகரிப்பு!

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள்...