கோட்டாபய மைத்திரி
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டா ஆட்சியில் பட்டினிச்சாவு! – மைத்திரி விளாசல்

Share

“நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.”

– இவ்வாறு விளாசித் தள்ளினார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

“தேசிய அரசமைக்கும் முயற்சிக்கு எமது கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்பதைத் திட்டவட்டமாக கூறிவைக்க விரும்புகின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொனறாகலை மாவட்டக் கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்துடன் நல்லுறவு இருக்கவில்லை. ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தினர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருந்தபோது, அமைச்சர் ஒருவரே அவருக்குத் திருமண அழைப்பிதழை விடுத்தார். எனினும், நல்லாட்சியில் சர்வதேசத்துடனான உறவை பலப்படுத்தினேன். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றேன்.

நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மக்கள் வீதிகளில் வரிசைகளில் நிற்கவில்லை. இந்த ஆட்சியில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...

disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...