Sritharan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களால் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது!! – விஜயதாசவுக்கு சவால் விட்ட சிறிதரன் எம்பி

Share

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே எமது தலைவர் என்றும்  வாழ்நாள் முழுவதும் அவரை நாம் மறக்கப்  போவதில்லை என்றும் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன், உங்களாலும் பிரபாகரனை  மறக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும்,  நீதியமைச்சர் விஜேதாஸவை பார்த்து நீங்கள் இனவாதத்தை விதைப்பவர் என்றும் நீங்கள் ஓர் இனவாதி எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  கூறுகையில்,

நீங்கள் தற்போதும் பிரபாகரனை மறக்கவில்லை, நாங்களும் மறக்கப் போவதில்லை. வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டோம் எங்கள் தலைவர் பிரபாகரன்தான், அவர் நேர்மையான கண்ணியமான தலைவர் என்று குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் பிரபாகரனை விமர்சிக்காதீர்கள், படித்தவர்கள், போல் உரையாற்றுங்கள் முட்டாள் போல் பேச வேண்டாம் , நீங்கள் இனவாதத்தை விதைப்பவர். நீங்கள் ஓர் இனவாதி” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...