கோட்டாபய 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் போட்டியிடமாட்டேன்! – கோட்டா வாக்குறுதி

Share

“நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை. மக்கள் எனக்கு 5 வருடகால ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பேன். நாட்டைச் சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஏற்கனவே வழங்கிய வெற்றிகரமான சேவையை மீள ஸ்தாபிக்க விரும்புகின்றேன். 6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கைக்கான உதவிக்காக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஓமானிடம் இருந்து நீண்டகால எரிபொருள் ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ளேன்.

சலுகை கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட வேண்டும். இராணுவத்துக்கும் பொதுச் சேவைக்குமான ஒதுக்கத்தை குறைக்க முடியுமே தவிர இரத்துச் செய்ய முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக இரத்துச் செய்து விட்டு வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...