Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

Share

 

ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மக்கள் NPPக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து இழைத்த தவறை திருத்துவதற்கு தயாராகியுள்ளனர் என்றும், அதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு இந்த அரசாஙக்ம் பல சதிகளை செய்து வருகின்றது.

நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும், மக்கள் இதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

அரசாங்த்தின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கைக் கிடையாது. மக்கள் இழைத்த தவறை சரிசெய்யும் பொருட்டு ராஜபக்சர்களின் ஆட்சியை மீளக் கட்டியெழுப்ப மக்கள் தயாராகியுள்ளனர்.

2029ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். இதனால் நாமல் ராஜபக்சவை எந்த வழியிலாவது நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...