சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஏன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கியுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்கவில்லை.
அவருக்குப் பதிலாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்திற்கு சென்று சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்றிருந்தார்.
சீனாவுடன் தனிப்பட்ட ரீதியிலான உறவுகள் பேணப்பட்டு வருவதனால், நாமல் விமான நிலையம் சென்று வரவேற்றார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சீனா போன்ற வலுவான நாட்டின் தலைவர்கள் அடிக்கடி இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு விஜயம் செய்வது மிகப்பெரிய பிரச்சினையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்த அமைச்சர் வந்தாலும் , நாட்டின் வளங்களை கொள்ளையிடுவதே அவர்களின் நோக்கம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment